நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

T15 குழுவின் வரையறை, வகைப்பாட்டை அமைச்சரவை விரைவில் உறுதி செய்யும்: பொருளாதார அமைச்சர் ரஃபிசி ராம்லி

கோலாலம்பூர்:

T15 வருமானக் குழுவின் வரையறை, வகைப்பாடு தொடர்பான முன்மொழிவுகள் சுதாகரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அமைச்சரவை T15 வருமானக் குழுவின் வரையறையும், வகைப்பாடும் முடிவு செய்யும் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி இன்று தெரிவித்தார்.

அமைச்சரவையில் T15 பற்றிய பல முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டு வருகிறது. T15 வர்க்கத்தினரைப் பற்றிய கருத்து, வகைப்பாடு அரசாங்கத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டால், அதன் வகைப்பாடு அரசாங்க உதவியையும் மானியங்களையும் வழங்க பயன்படுத்தப்படும்.

பொருளாதார அமைச்சகத்திலிருந்து T15 வர்க்கத்தின் முன்மொழியப்பட்ட வகைப்பாடு, இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட மொத்த வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையிலிருந்து, அதாவது B40, M40, T20, வரிக்குப் பின் வழங்கப்படும் வருமான முறைக்கு உள்ளடக்கிய, நியாயமான அளவீடு, இலக்கு ஆகியவற்றை உறுதி செய்வதாக நாடாளுமன்றத்தில் ரஃபிசி ரம்லி கூறியுள்ளார்.

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தபடி எரிபொருள், கல்வி, சுகாதார மானியங்களைத் திரும்பப் பெறும் T15 குழு குறித்து அரசாங்கத்தின் விவரங்களைக் கேட்ட செனட்டர் பஹாருதீன் அகமதுவுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இதைக் கூறினார்.

PAKW என்பது குடும்பங்கள் தங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யக்கூடிய, சமூகத்தில் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்க வாய்ப்பைப் பெறக்கூடிய ஒரு நியாயமான வாழ்க்கையை வாழத் தேவையான செலவினங்களைக் குறிக்கிறது.

கூடுதலாக, மாநிலங்களுக்கிடையேயான பல்வேறு பகுதிகளில் வாழ்க்கைச் செலவை PAKW தெளிவுபடுத்த முடியும். சமூக-பொருளாதார திட்டமிடலிலும், வளர்ச்சியிலும் ஒரு வழிகாட்டியாக மாறும். மேலும், நியாயமான ஊதியங்களை தீர்மானிப்பது, தனிநபர்கள், குடும்பங்களுக்கு வீட்டுச் செலவுகள், நிதி நிர்வாகத்தைத் திட்டமிட உதவுவதாகவும் ரஃபிசி விளக்கமளித்தார்.

-நந்தினி ரவி & மவித்திரன் 
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset