நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி My50 பாஸ்-க்கான புதுப்பித்தல் நடவடிக்கை ஒத்திவைப்பு: பொது போக்குவரத்து நிர்வாக அமைப்பு

பெட்டாலிங் ஜெயா: 

My50 பாஸ் புதுப்பித்தல் செயல்முறைத் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொது போக்குவரத்து நிர்வாக அமைப்பு, Prasarana தெரிவித்துள்ளது. 

இந்தப் புதுபித்தல் நடவடிக்கை டிசம்பர் 23-ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

My50 பாஸ் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால் பாஸ் விற்பனையை முறையே மேம்படுத்துவதற்காகவே இந்தத் தற்காலிக ஒத்திவைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், தற்போதைய பயனர்கள் பாஸ் காலாவதியாகும் வரை பயன்படுத்தியப் பின்னரே புதிய பாஸை வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- கௌசல்யா ரவி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset