நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தா கினபாலு ரானாவை இருமுறை  நிலநடுக்கம் தாக்கியது: மெட் மலேசியா  

கோத்தா கினபாலு:

கோத்தா கினபாலு ரானாவை இரண்டு முறை நிலநடுக்கம் தாக்கியது என தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியது.

நேற்று பிற்பகல் 2.56 மணிக்கு 2.8 ரிக்டர் அளவிலும் இன்று காலை 10.01 மணிக்கும் 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ரானாவை உலுக்கியுள்ளது.

ரானாவுக்கு மேற்கே 14 கிலோமீட்டர் தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக அம்மையம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

10 கிலோ மீட்டர் தாழ்வான பகுதியில் ஏற்பட்ட பலவீனமான நிலநடுக்கம் ரானாவ் மாவட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது.

மலேசிய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து இந்த ரானாவ் பகுதியின் நிலையைக் கண்காணிக்கும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த விஷயம் தங்களுக்குத் தெரியும் என்றும் இதுவரை எதிர்பாராத சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் சபா தீயணைப்பு, மீட்புத் துறையின்  செய்தித் தொடர்பாளர் கூறினார்.

- நந்தினி ரவி

தொடர்புடைய செய்திகள்

+ - reset