நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய பள்ளிகளைக் கட்டுவதற்குப்  பாதுகாப்பான பகுதிகளை அரசு ஆராய்கிறது: ஃபட்லினா சிடேக்  

அராவ் :

வரும் காலங்களில் புதிய பள்ளிகளைக் கட்டுவதற்குப்  பாதுகாப்பான பகுதிகளை அரசு ஆய்வு செய்து வருவதாக கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார். 

குறிப்பாக வெள்ள பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் பள்ளிகள் கட்டப்பட வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கமாகத் திகழ்கிறது. 

வெள்ளத்தின் போது பெரும்பான்மையான பள்ளிகள் தற்காலிக வெள்ள நிவாரண  மையங்களாக மாற்றப்படுகின்றன. 

இதன் காரணமாகப் , பாதுகாப்பான இடங்களைத் தேர்ந்தெடுப்பதில் அரசாங்கம்  அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வியமைச்சர்  கூறினார்.

வெள்ளம் உட்பட அனைத்து   இயற்கை  பேரிடர் ஏற்படும் போது ​​பள்ளியில் கல்வி செயல்முறைக்கு இடையூறு ஏற்படாத வகையில் பள்ளிகள் அமைய வேண்டும்  என்பதே  கவனிக்கப்பட வேண்டிய  முக்கிய கூற்றாகும் என்று கல்வியமைச்சர் கூறினார்.

-  சாமுண்டிஸ்வரி பத்துமலை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset