நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமரைக் குற்றம் சாட்டுவதற்கு முன் முதலில் சபா மாநில அரசியல் அமைப்பு சட்டத்தைப் படியுங்கள்: ஃபஹ்மி ஃபாட்சில்

பெட்டாலிங் ஜெயா : 

பிரதமரைக் குற்றம் சாட்டுவதற்கு முன் முதலில் சபா மாநில அரசியல் அமைப்பு சட்டத்தைப் படியுங்கள் என்று மூடா கட்சியின் இடைக்காலத் தலைவர் அமிரா அய்ஷாவுக்கு ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் ஃபஹ்மி ஃபாட்சில் கண்டனம் தெரிவித்தார். 

சபா மாநில ஆளுநராக துன் மூசா அமான் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் அன்வாரின் தலையீடு ஏதும் இல்லை என்று ஃபஹ்மி உறுதியளித்தார். 

முன்னதாக, துன் மூசா அமான் ஆளுநராக நியமிக்கப்பட்டதில் பிரதமர் அன்வாரின் தலையீடு இருப்பதாக மூடா கட்சியின் இடைக்கால தலைவர் அமிரா அய்ஷா குற்றம் சாட்டினார்.

சபா அரசியலமைப்பின் பிரிவு 1-இன் கீழ் நியமனச் செயல்பாட்டில் எந்தச் சூழ்நிலையிலும் பிரதமருக்கு எப்பங்கும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக கூறினார். 

சபா அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, சபா முதல்வரிடம் ஆலோசனையை ஏற்றப் பின்னரே ஆளுநரை தேர்ந்தெடுக்க முடியும்.

- தர்மவதி கிருஷ்ணன் & அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset