நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025 புத்தாண்டை கோலாகலமாக வரவேற்கவிருக்கிறது சரவா: டத்தோஶ்ரீ  அப்துல் கரிம்

கூச்சிங்:

சரவா மாநிலம் கூச்சிங் வாட்டர்ஃபிரண்டில் 2025க்கான வரவேற்பு நிகழ்ச்சி  மிகவும் கோலாகலமான கொண்டாடவுள்ளது.

சரவா மாநில சுற்றுலா,கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ  ஶ்ரீ  அப்துல் கரிம் ராஹ்மான் ஹம்சா தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள்.

ஏரோபிக்ஸ், இசை நிகழ்ச்சி, கலை கண்காட்சி ஆகியவற்றுடன் காலையில் நிகழ்ச்சி தொடங்கி உள்ளூர் கலைஞர்களின் நடன நிகழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து கவுண்டவுடன் விழா முடிவு பெரும்.

அதோடு, சரவா  பாடலாசிரியர், பாடகரான ஜீ அவி, இந்தோனேசிய கலைஞர் ஹெட்டி கோஸ் ஏண்டாங் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிப்பார்கள்.

மேலும், சரவா பிரிமியர் டான்ஶ்ரீ அபாங் ஜொஹாரியுடன் சரவா மாநில ஆளுநர் துன் டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபார், அவரது துணைவியார் ஃபௌசியா முகமட் சனுசி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவிருக்கின்றனர் என்று அவர் கூறினார்.

- கௌசல்யா ரவி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset