நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமிரூடினை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை: குணராஜ்

ஷாஆலம்:

சிலாங்கூர் கெஅடிலான் தலைவராக டத்தோஶ்ரீ  அமிரூடின் ஷாரி தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறார்.

அதனால் அவரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று மாநில கெஅடிலான் உதவித் தலைவர் குணராஜ் கூறினார்.

அம்னோவைச் சேர்ந்த தெங்கு ஸப்ருல் அஜிஸ் கட்சிக்கு மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் பேசிய அவர் சிலாங்கூர் மந்திரிபுசார் பொறுப்பு உட்பட அமிரூடினின் தலைமை இன்னும் மாதிநிலத்தை ஆள்வதற்கு முக்கியமானதாக உள்ளது.

அதனால் இப்போது சிலாங்கூர் கெஅடிலானுக்கு அமிரூடினுக்கு மாற்றாக தேவையில்லை. 

அவரது தலைமை இன்னும் தேவைப்படுகிறது. மேலும் அவர் வலுவான சாதனை படைத்தவர் என்று குணராஜ் கூறினார்.

நாட்டில் கட்சித் தாவல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அம்னோ, 

இதுபோன்ற செயல்களின் எதிர்மறையான விளைவுகளை இப்போது அறிந்திருப்பதாக அவர் கூறினார்.

அதே வேளையில் கெஅடிலானில் யாரையும் கட்சியில் சேர அழைக்கவில்லை என்பதால் வான் ரோஸ்டியின் கருத்துகள் ஆதாரமற்றவை என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset