நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மண் ஆய்வுத் துறைக்கு அரசாங்கம் 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது: ஜலிஹா

கோலாலம்பூர் :  

மண் ஆய்வுத் துறைக்கு அரசாங்கம் 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதாகப் பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தஃபா தெரிவித்தார். 

இது குறித்த அறிவிப்பு இன்று மேலவையில் அறிவிக்கப்பட்டது. 

ஜாலான் மஸ்ஜித் இந்தியா, விஸ்மா மேலாயுவில் உள்ள நில அமிழ்வு ஏற்பட்ட  பகுதியைச் சரி செய்யும் பணி இம்மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

அப்பகுதியில் உள்ள சாலைகளை பொதுமக்கள் வருகின்ற நவம்பர் மாதம் 10-ஆம் தேதி தொடங்கி பயன்படுத்தலாம் என்று ஜலிஹா கூறினார். 

கோலாலம்பூர் மாநகர மன்றத்திற்கு உதவுவதற்காக,  புவியியல் மற்றும் மண் அமைப்பு துறைக்கு 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளதை ஜலிஹா குறிப்பிட்டார். 

கோலாலம்பூர் மாநகர மன்றம் தற்பொழுது மண் ஆய்வு அறிக்கையையும் தரவுகளையும் சேகரித்து வருவதாக அமைச்சர் ஜலிஹா தெரிவித்தார்.

- தர்மவதி கிருஷ்ணன் & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset