நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா - தாய்லாந்துக்கு இடையிலான ரயில் போக்குவரத்து சேவை மேம்படுத்தப்படும்: அந்தோணி லோக் 

கோலாலம்பூர்:

மலேசியா - தாய்லாந்துக்கு இடையிலான  ரயில் போக்குவரத்து சேவை மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்துக்கு அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

சீனாவுடன் ஆசிய ரயில்  வர்த்தகத்தை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக   தாய்லாந்துடன் ரயில் போக்குவரத்து சேவையை அதிகரிக்கும்   நடவடிக்கையில்  மலேசியா செயல்பட்டு வருகிறது.

தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா நேற்று மலேசியாவிற்கு வருகை புரிந்தப் போது இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், மலேசியா தாய்லாந்துடனான தொடர்பை மேம்படுத்தி தாய்லாந்து, லாவோஸ், சீனாவுடன் ரயில் சேவை இணைக்கப்படும்.

இது பான்-ஆசிய ரயில் சேவையை ஒட்டுமொத்தமாக  மேம்படுத்த உதவும்  என்று லோக்  செய்தியாளர்களிடம் கூறினார்.

மலேசியாவிற்கும் தாய்லாந்துவிற்கும் இடையிலான சாலை, ரயில் அடிப்படையிலான சரக்குகள், பயணிகளின் போக்குவரத்து சேவையை எளிதாக்குவது இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்க உதவுகிறது என்று பேடோங்டர்னும்  பிரதமர் அன்வார் இப்ராஹிமும்  கூறியுள்ளனர். 

தற்போது, ​​ஆயிரக்கணக்கான கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் பெரிய கப்பல்களின் செயல்திறன் காரணமாக மலேசியாவின் 95% க்கும் அதிகமான வர்த்தகம் கடல் வழிகளையே சார்ந்துள்ளது.

இதன் மூலம் ரயில் சேவைக்கு மாற்றாக பெரும் ஆற்றல் உள்ளது என்று லோக் தெரிவித்தார். 

வரும் ஆண்டுகளில், ஆசியான் முழுவதும் சரக்குகளைக்  கொண்டு செல்வதில் ரயில் சேவை பெரும் பங்கு வகிக்கப் போவதாக நம்பப்படுகின்றது. 

அதுமட்டுமின்றி, கிழக்கு கரையின்  ரயில் பாதை முடிவடைந்த பிறகு , கடல்சார் வர்த்தகத்திற்கான ஓட்டுமத்த சேவையாக இரயில் சேவையை பயன்பாட்டை மேம்படுத்துவதாகவும்   அவர் கூறினார்.

- சாமுண்டிஸ்வரி பத்துமலை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset