நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண்ணின் கார் டயரை ஓட்டையாக்கிய ஆடவர் கைது

இஸ்கண்டார் புத்ரி:

பெண்ணின் கார் டயரை ஓட்டையாக்கிய 43 வயதான சந்தேக ஆடவரை போலிசார் கைது செய்தனர்.

இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலிஸ்படை உதவி ஆணையர் எம்.குமரேசன் இதனை தெரிவித்தார்.

தாமான் புக்கிட் இன்டா பகுதியில் இரவு 9.45 மணியளவில் 21 வயது  பெண்ணின் காரின் டயரை அவ்வாடவர் ஓட்டையாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான காணோலி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து போலிசார் அந்நபரை கைது செய்ததனர்.

மேலும், சந்தேக நபரின் பேரில் ஆறு முந்தைய குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.

சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் கலப்பு ஏதும் இல்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 427 கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

- கௌசல்யா ரவி

தொடர்புடைய செய்திகள்

+ - reset