நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவகத்தில் அமைச்சர் புகைப்பிடித்த விவகாரம்: சட்டம் தன் கடமையைச் செய்யும் 

கோலாலம்பூர்: 

உணவகத்தில் அமைச்சர் ஒருவர் புகைப்பிடித்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் சுல்கிஃப்ளி அஹ்மத் கூறினார் 

அனைவருமே சட்டத்திற்கு உட்பட்டவர்களாவர். ஆக, யாரும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என்று டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மத் திட்டவட்டமாக சொன்னார் 

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் புகைப்பிடித்தல், புகைப்பொருட்கள் கட்டுபாடு சட்டம் அமலில் இருந்து வருகிறது 

முன்னதாக, வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான் புகைப்பிடித்ததாக வெளியாகியுள்ள புகைப்படங்கள் தொடர்பில் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார் 

852ஆவது சட்டத்தின் செக்‌ஷன் 16இல் புகைப்பிடிக்க தடை செய்யப்பட்ட இடங்களில் யாரெனும் புகைப்பிடித்தால் அவர்களுக்குத் தகுந்த அபராதம் விதிக்கப்படும் என்று சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset