நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லியோனல் மெஸ்ஸிக்கு அடுத்து எம்பாப்பே புதிய சாதனை

மாட்ரிட்:

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி வீரர் கிளையன் எம்பாப்பே 50 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

சாம்பியன் லீக்கில் ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் கிளையன் எம்பாப்பே சில மாதங்களாக ஸ்கோர் செய்ய முடியாமல் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அண்மையில் நடந்த அட்லாண்டா உடனானா போட்டியில் 10ஆவது நிமிடத்தில் அசத்தலாக கோல் அடித்தார். 

அவர் கொண்டாடிய விதம் அவரது ரசிகர்களுக்கு குதூகலத்தை அளித்தது. 

இந்த கோலின் மூலம் கிளையன் எம்பாப்பே சாம்பியன் லீக்கில் தனது 50ஆவது கோலை இளம் வயதில் நிறைவு செய்துள்ளார். 

25 ஆண்டு 356 நாள்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

இதற்கு முன்பு லியோனல் மெஸ்ஸி 24 ஆண்டு 284 நாள்களில் 50 கோல்கள் அடித்ததே முதல் இடத்தில் இருக்கிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset