நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலானில் 2025-ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டம் ஏற்பாடு செய்யவில்லை: அமினுடின் ஹாருன் 

கோல பிலா: 

2025-ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் நெகிரி செம்பிலான் மாநில அரசு எந்தக் கொண்டாட்டங்களையும் ஏற்பாடு செய்யவில்லை என்று அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்தார். 

நாட்டில் வெள்ளப் பிரச்சனை , பாலஸ்தீனப் போர் , வீண் விரயத்தைத் தடுத்தல் ஆகிய காரணங்களுக்காக  2025 -ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சி நெகிரி செம்பிலானில் ஏற்பாடு செய்யவில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். 

இருப்பினும்,  மாநிலத்திற்கும் வரும் சுற்றுலா பயணிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு அரசு சாரா நிறுவனங்கள் சிறிய அளவிலான புத்தாண்டு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்யலாம் என்று அவர் அறிவித்துள்ளார். 

இதனையடுத்து,  அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன் பிகேஆர் கட்சித் தேர்தல்கள் நடத்தப்படும்  என்று நெகிரி செம்பிலான் பிகேஆர் கட்சியின் உச்சமன்றத் தலைவருமான அமினுடின் தெரிவித்தார். 

- சாமுண்டிஸ்வரி பத்துமலை & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset