நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா மாநில ஆளுநராக துன் மூசா அமான் நியமனம்

கோத்தா கினபாலு:

சபாவின் முன்னாள் முதல்வர் துன் மூசா அமான் அடுத்த  சபா மாநிலத்தின் புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.

அவரின் பதவிக் காலம் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அவர் இன்று கோலாலம்பூரின் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தை அவர் பெற்று கொண்டார்.

அதே வேளையில் அவர் மாமன்னரிடம் இருந்து ஶ்ரீ மகாராஜா மங்கு நெகாரா எனும் துன் பட்டத்தையும் அவர் பெற்றுக் கொண்டார்.

73 வயதான துன் மூசா அமான், தற்போதைய ஆளுநர் துன் ஜுஹார் மஹிருதீனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.

துன் ஜுஹார் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பதவியை வகித்து வரும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் தனது சேவைக் காலத்தை முடித்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset