நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழியர்களுக்கு 7 மாதங்கள் சம்பளம் வழங்காத கவாகுச்சி நிறுவனத்திற்கு எதிராக 8 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன

கோலாலம்பூர்:

ஊழியர்களுக்கு 7 மாதங்கள் சம்பளம் வழங்காத கவாகுச்சி நிறுவனத்திற்கு எதிராக 8 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன.

தேசிய ஆள்பல இலாகா ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை உறுதிப்படுத்தியது.

கிள்ளானில் செயல்பட்டு வரும் கவாகுச்சி உற்பத்தி நிறுவனம் தனது தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த மாதம் 57 வங்காளதேச தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக 806,310.00 ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்கு வழக்கு தொடரப்பட்டது.

இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக ஊதியம் தாமதமாகச் செலுத்துதல், தங்குமிடம் சான்றிதழ் இல்லாத குற்றம் உட்பட எட்டு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் வங்காளதேச தூதரகம், சம்பந்தப்பட்ட நிறுவன நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது என  அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset