நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளாந்தானில் 113 கம்போங்களில் கனமழையால் வெள்ளம் ஏற்படும்: மெட் மலேசியா

கோத்தா பாரு:

புதன்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை கிளாந்தானில் தொடர்மழையால் வெள்ளம் ஏற்படும் என்று  மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வெள்ளத்தில் கிளந்தானிலுள்ள 113 கம்போங்கள் பாதிக்கப்படும் என்றும் மெட்மலேசியா தெரிவித்துள்ளது. 

மாச்சாங்கில் 15 கம்போங், பாசிர் மாஸில் 54 கம்போங், தும்பாட்டில் 16 கம்போங் மற்றும் கோத்தா பாருவில் 28 கம்போங் ஆகியப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும். 

இந்த கம்போங் அனைத்தும் ஆறுக்கு 5 கிலோமீட்டர் அருகே உள்ளதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்று மெட் மலேசியா தெரிவித்துள்ளது. 

அனைத்து குடியிருப்பாளர்களும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படவிறுக்கும் பகுதி மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

- கௌசல்யா ரவி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset