நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

11 மாத குழந்தையை துன்புறுத்தியதாக நம்பப்படும் குழந்தை காப்பக பள்ளி ஆசிரியை கைது

சுங்கைபூலோ:

11 மாத குழந்தையை துன்புறுத்தியதாக நம்பப்படும்  குழந்தை காப்பக பள்ளி (நர்சரி) ஆசிரியை போலிசார் கைது செய்துள்ளனர்.

சுங்கை பூலோ மாவட்ட போலிஸ் தலைவர் முகமட் ஹபீஸ் முஹம்மது நோர் இதனை தெரிவித்தார்.

சிலாங்கூர், புன்சாக் ஆலமில் உள்ள  பள்ளியில் 11 மாத ஆண் குழந்தையை துன்புறுத்தப்பட்ட வழக்கை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

அப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய 24 வயது பெண் சுங்கை பூலோ மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் மாலை 6.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு பள்ளியில் இருந்து குழந்தையை அழைத்து சென்ற மகனின் கன்னத்திலும் வலது காதிலும் காயங்கள் இருப்பதாக உள்ளூர் நபரிடமிருந்து போலிசாருக்கு புகார் வந்தது என்றூ அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset