நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் ஜாவா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் அரசியல் செய்ய ஒன்றுமில்லை; மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்: சசிதரன்

கிள்ளான்:

கம்போங் ஜாவா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் அரசியல் செய்ய ஒன்றுமில்லை. மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்.

சிலாங்கூர் மாநில மஇகா தலைமை செயலாளர் எம். சசிதரன் இதனை கூறினார்.

கம்போங் ஜாவா பத்து 4 தமிழ்ப்பள்ளி வகுப்பறையின் கூரை அண்மையில் சரிந்து விழுந்தது.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சிலாங்கூர் மாநில மஇகாவின் அப்பள்ளிக்கு சென்றனர்.

கூரை சரிந்து விழுந்த இடத்தை பார்வையிட்டதுடன் பள்ளியின் மற்ற கட்டடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த குத்தகையாளரையும் மஇகா நியமித்ததது.

அதே வேளை இப்பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வியமைச்சையும் பொதுப்பணி அமைச்சையும் மஇகா கேட்டுக் கொண்டது.

இந்த விவகாரத்தில் மஇகா யாரையும் குற்றம் சாட்டவில்லை. மாணவர்களின் பாதுக்காப்பை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கையை செய்தோம்.

ஆனால் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், எங்களை எதுவும் தெரியாமல் பேசுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

எங்களுக்கு பதில் சொல்வதை விட அவர் நேரடியாக அப்பள்ளிக்கு சென்று உண்மை நிலவரத்தை பார்ப்பதுடன் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சசிதரன் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset