நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

ஆசியான் 2025ன் அதிகாரப்பூர்வா காராக புரோட்டோன் இ மாஸ் 7 இருக்கும்: பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர்:

நாட்டின் முதல் மின்சார வாகனமான புரோட்டோன் இ மாஸ் 7 ஆசியான் 2025இன் தலைவராக பொறுப்பேற்கும் மலேசியாவின் அதிகாரப்பூர்வ வாகனமாக இருக்கும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

கோலாலம்பூரில் உள்ள மலேசியா சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையமான மைடேக்கிம் இந்த வாகனத்தை அறிமுக விழா நடைபெற்றது.

அவ்வகையில் அடுத்த ஆண்டு ஆசியானுக்கு, இ மாஸ் 7 மலேசியாவின்  அதிகாரப்பூர்வ வாகனமாக இருக்கும். 

தரமான மின்சார கார்களை உற்பத்தி செய்யும் மலேசியாவின் திறனை இது ஊக்குவிக்கிறது.

புரோட்டான் நிறுவப்பட்டதில் இருந்து கடந்து வந்த ஏற்ற தாழ்வுகளை எடுத்துக்காட்டி,

கடந்த காலத்தில் கற்றுக் கொண்டவற்றின் விளைவாக இன்றைய வெற்றியை கண்டுள்ளது என பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset