நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூருக்குப் புறப்பட்ட 20 நிமிடங்களில் மோசமான வானிலை காரணமாகப் பினாங்கில் மீண்டும் தரையிறங்கியது ஏர் ஏசியாவின் ஏகே 1729 விமானம்

கோலாலம்பூர்: 

சிங்கப்பூருக்குப் புறப்பட்ட  ஏர் ஏசியாவின் ஏகே 1729 ரக விமானம் மோசமான வானிலை காரணமாகப் பினாங்கில் மீண்டும் தரையிறங்கியது.

இந்தச் சம்பவம் டிசம்பர் 13 -ஆம் தேதி இரவு ஏகே 1729 ரக விமானம் பினாங்கு சர்வதேச விமான நிலையத்திற்குத் திரும்பியது. 

மறுநாள் டிசம்பர் 14-ஆம் தேதி ஏகே 1729 ரக விமானம் பயணிகள் அனைவரையும் ஏற்றிக் கொண்டு அதிகாலை 5.50 மணிக்குச் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு காலை 7 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

ஏறக்குறைய இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில்  ஏகே 1729 விமானம் புறப்பட்டது. 

ஆனால் விமானம் மோசமான வானிலை காரணமாகப் பினாங்கில் மீண்டும் தரையிறங்கியதாக ஏர் ஆசியா நிறுவனம் தெரிவித்தது. 

பயணிகள் அனைவருக்கும் உணவு மற்றும் தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏர் ஆசியா விமான நிறுவனம் கூறியது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset