நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான  வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடைமுறை தொடரும்: ஃபட்லினா சிடேக்    

டுங்குன்: 

அடுத்த ஆண்டு மாரச் மாதம் வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான  வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கை தொடரும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மாணவர்கள்  தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அங்கிருந்தபடி கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ள கல்வியமைச்சு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. 

மேலும், கற்றல் கற்பித்தல் நடவடிக்கையின் போது மாணவர்கள் இணையத் தடங்கலை எதிர்நோக்கினால், கற்றல் கற்பித்தல் தொடர்பான பாடக் குறிப்புகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கலாம் என்று ஃபட்லினா கூறினார். 

அதுனுடன்,  வெள்ளத்தால் சேதமடைந்த பள்ளியிலுள்ள தளவாடப் பொருட்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவதற்குள் சரிசெய்யப்படும் என்று ஃபட்லினா சிடேக்      உறுதியளித்தார்.

- சாமுண்டிஸ்வரி பத்துமலை & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset