நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நடுக்கடலில் மனைவியைக் காப்பாற்ற  5 மணி நேரம் நீந்திச் சென்ற கணவர் 

பாங்காக் :

சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி கடலின் நடுவில் சிக்கித் தவிக்கும் தனது மனைவியை மீட்க தாய்லாந்தின் நடுக்கடலில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீந்தியதாக தி பட்டாயா செய்தித்தளம் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. 

 பட்டாயா நகரத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோம்டியன் கடற்கரைக்குத் தனது மனைவியைக் காப்பாற்ற இரண்டு கிலோமீட்டர் நீந்திச் சென்றார் 26 வயதானஅப்துல்ரஹ்மான் மஹ்தி எம். ஆலம்ரி.

அப்துல் ரஹ்மான் நடுக்கடலில் உடைந்த ஜெட் ஸ்கீவுடன் சிக்கித் தவிக்கும் தனது மனைவி அதிர் சயீத் ஏ அலம்ரியைக் காப்பாற்ற இருட்டில் நீந்த தனது உயிரைப் பணயம் வைத்தார். ரஹ்மான் நடுக்கடலில் நீந்துவதை ஒரு நபர் பார்த்துவிட்டார்.  பின்னர், அந்த நபர் அச்சம்பவம் தொடர்பாக  நடவடிக்கை  அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். 

தகவல் தெரிவித்தப் பின், ஒரு ரோந்துப் படகு அக்கடற்கரைக்கு அனுப்பப்பட்டது. அதே நேரத்தில் அதீர் கரையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கவிழ்ந்த ஜெட் ஸ்கியில் ஒட்டிக்கொண்டு பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தத் தம்பதியினர் ஜோம்டியன் கடற்கரையில் ஒரு மணி நேரம் ஜெட் ஸ்கீயை வாடகைக்கு எடுத்தனர். ஆனால், அந்த ஜெட் ஸ்கீ வாடகை நேரம் முடிந்த பிறகும், அவர்கள் கடற்கரைக்கு திரும்பவில்லை.

இது ஜெட் ஸ்கீ சர்வீஸ் ஆபரேட்டரை ஆரம்ப தேடலைத் தொடங்க தூண்டியது. ஆனால், அத்தம்பதியினரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

-நந்தினி & மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset