நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தின் நம்பிக்கை மீண்டும் மஇகா பக்கம் திரும்பியுள்ளது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

இந்திய சமுதாயத்தின் நம்பிக்கை மீண்டும் மஇகா பக்கம் திரும்பியுள்ளது என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் கூறினார்.

அரசாங்கத்திலும் அமைச்சரவையிலும் எந்தவொரு பதவிகள் இல்லை என்றாலும் இந்திய சமுதாயத்திற்கு நிறைவான சேவையை மஇகா தொடர்ந்து வழங்கி வருகிறது.

இதன் அடிப்படையில் இந்திய சமுதாயத்தின் நம்பிக்கை மீண்டும் மஇகா பக்கம் திரும்பியுள்ளது.

இந்திய சமுதாயத்திற்கு ஒரு சக்தி வாய்ந்த கட்சி மஇகா தவிர வேறு எந்த கட்சியும் இல்லை.

ஆகவே மஇகாவை இன்னும் ஆற்றல் வாய்ந்த கட்சியாக விளங்கிட நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு மஇகா அளப்பரிய சேவையாற்றி வருகிறது.

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் மூலம் மஇகா இந்திய மாணவர்களின் கல்விக்கும் பெரும் அளவில் உதவிகளை வழங்கி வருகிறது.

அண்மையில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மண்டபத்தில் கெடா மாநில அம்னோ பேரவை விமரிசையாக நடைபெற்றது.

மாநாட்டை நடத்திய கெடா அம்னோ தலைவர்கள் இந்த ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை பார்த்து வியந்து பாராட்டினர் என்று அவர் சொன்னார்.

இன்று ம இகா நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற தமது பிறந்த நாள் விழாவில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset