நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய தொழில்முனைவோரின் மேம்பாட்டிற்காக 204.5 மில்லியன் ரிங்கிட் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

இந்திய தொழில்முனைவோரின் மேம்பாட்டிற்காக தெக்குன் ஸ்பூமி திட்டத்தின் வாயிலாக 204.5 மில்லியன் ரிங்கிட் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

கடந்த 2019 முதல் நவம்பர் 2024 வரையிலான காலக்கட்டத்தில் ஸ்பூமி திட்டத்தின் கீழ்  மூலம் 9,412 பேருக்கு கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அந்த எண்ணிக்கையின் மூலம் மொத்தம் 1,877 தொழில் முனைவோர் அதாவது 20 சதவீதம் பேர் தெக்குன் நேஷனல் வழங்கிய கடனுதவியை  திருப்பிச் செலுத்தத் தவறி விட்டனர்.

இதனால் அவர்கள்  கடன் அறிக்கையிடல் நிறுவனங்களில் பட்டியலிடப்பட்டனர்.

நிதியை திருப்பிச் செலுத்துவதில் உள்ள சிக்கலைச் சமாளிக்க அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதுமட்டுமின்றி, தெக்குன் மூலம், கடன் ஆலோசனை, மேலாண்மை நிறுவனத்துடன் (ஏகேபிகே) நிதிக் கல்வித் திட்டத்தையும் அமைச்சு கொண்டுள்ளோம்.

ஸ்பூமி கடன்களை செலுத்தத் தவறியதன் விளைவாக கடன் வாங்கியவர்களின் சதவீதம் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதுடன் திருப்பிச் செலுத்தும் சிக்கல்களைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மேலவையில் செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரனின் கேள்விக்கு டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு பதிலளித்தார்.

இதற்கிடையில், கடனுதவி பெற்றவர்கள் தொடர்ந்து ஆறு மாத காலத்திற்கு தவறாமல் பணம் செலுத்தினால் அவர்களுக்கு கூடுதல் கடன்களை வழங்கப்படும்.

மேலும் கடன் வாங்குபவர்களுக்கு மாதத்திற்கு 30 ரிங்கிட்டுக்கும் குறைவான கட்டணத்தை செலுத்தவும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset