நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதே முதன்மை நடவடிக்கையாகும்: ரஸாருடின் ஹுசைன்

கோலாலம்பூர்:

 நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதன் வழி பல்வேறு அச்சுறுத்தல்களிலிருந்து தேசத்தைப் பாதுகாக்க இயலும் என்று அரச மலேசிய காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.

2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறைக்கு 560 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை நிலத்திலும் கடலிலும் எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த திறம்பட பயன்படுத்தப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்த ஒதுக்கீடு போதைப்பொருள், துப்பாக்கிகள், கடத்தல் பொருட்கள்,  விலங்குகள் மற்றும் மனித கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முறியடிக்க பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைக்கும் பயங்கரவாதக் குழுக்கள் சபாவில் உள்ள தொலைதூரப் பகுதிகளில் ஊடுருவுவதைத் தடுப்பதற்கான முயற்சியின் முக்கியத்துவத்தையும் ரஸாருடின் வலியுறுத்தினார்.

- கௌசல்யா ரவி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset