நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா தலைமையகத்தில் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்  டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் 

கோலாலம்பூர்:

மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் பிறந்த நாள் விழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ம இகா நேதாஜி மண்டபத்தில் இன்று நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தம்பதியர் கேக் வெட்டி மகிழ்ந்தனர்.

மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் அவர்கள் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

மஇகாவின் தேசிய உதவித் தலைவர்களான டத்தோ  நெல்சன், டத்தோ அசோஜன், தலைமை செயலாளர் டத்தோ ஆனந்தன், நிர்வாக செயலாளர் டத்தோ டாக்டர் குமரராஜா, பொருளாளர் டத்தோ சிவக்குமார் ஆகியோர் மாலைகள் அணிவித்து சிறப்பு செய்தனர்.

மஇகா மாநிலத் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்களும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு மாலைகள் அணிவித்தனர்.

மஇகா தலைவர்கள், தொகுதி தலைவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிறந்த நாள் விழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset