நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரரசரை அவமதிக்கும் வகையில் வெளியிட்டுள்ள பதிவுகளை எம்சிஎம்சி விசாரிக்கின்றது: ஃபஹ்மி ஃபாட்சில் 

கோலாலம்பூர்:

பேரரசரை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பதிவுகளை மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி விசாரிப்பதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார். 

பேரரசர் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆகிய இருவர் மீது அவதூறுகளை முன் வைத்த ஆடவர் தற்போது மன்னிப்பு கோரியதாக ஃபஹ்மி குறிப்பிட்டார். 

அவதூறுகளை ஆதாரமற்ற முறையில் அவதூறாகப் பேசாமல் இருக்க இஃது அவருக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விரும்பினால், அதை அவர்களிடமே விட்டு விடுவதாகவும் அவர் கூறினார். 

இது போன்ற நடவடிக்கைகளைத் தனது தரப்பு தொடர்ந்து கண்காணிக்கும் என்று ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார். 

சமூக ஊடக பயனர்கள் எந்தவொரு உள்ளடக்கத்தையும் அல்லது கருத்துக்களையும் பதிவேற்றுவதில் கவனமாக இருக்குமாறு ஃபஹ்மி மீண்டும் நினைவூட்டினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset