
செய்திகள் கலைகள்
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்
வாஷிங்டன்:
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார். உடல்நலக்குறைவால் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் குடும்பத்துடன் வசித்து வந்த ஜாகிர் உசேனுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் பிரச்சினைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இருதய நோய் பிரச்சினை காரணமாக கடந்த வாரம் ஜாகிர் உசேன் ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் பரவியது. அவர் உயிரிழக்கவில்லை என்றும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஜாகிர் உசேன் உடல் நலன் குறித்து யாரும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாகிர் உசேன், பிரபல தபேலா இசை மேதை உஸ்தாத் அல்லா ரக்கா கானின் மகன் ஆவார்.
தந்தையைப் பின்பற்றி, ஜாகிர் உசேன் சிறுவயது முதலே இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
‘தால்’ உட்பட ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பிலும் ஜாகிர் உசேன் தனது பங்களிப்பைச் செய்துள்ளார்.
இசை சேவைக்காக ஜாகிர் உசேனுக்கு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல், சர்வதேச அளவில் உயரிய விருதான கிராமி விருதை 4 முறை வென்றவர் ஜாகிர் உசேன்.
அவரின் மறைவு இசைப்பிரியர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 27, 2025, 4:08 pm
நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2 படத்திற்கு இடைக்கால தடை: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
March 26, 2025, 12:57 pm
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மறைவு: திரைத்துறையினர் நேரில் அஞ்சலி
March 25, 2025, 11:02 pm
மனோஜ் பாரதிராஜா மறைவு: தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
March 22, 2025, 4:12 pm
லேடி காகா நிகழ்ச்சியினால் சிங்கப்பூரில் ஹோட்டல் அறைகளின் விலைகள் 60 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது
March 21, 2025, 4:47 pm
20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' பட கூட்டணி
March 21, 2025, 3:26 pm
நடிகர் விஜய்யின் சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாகம்
March 16, 2025, 2:08 pm
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
March 13, 2025, 7:29 am