
செய்திகள் மலேசியா
பாரதியை மாணவர்கள் மத்தியில் புலவராய் காட்டுவதை நிறுத்துங்கள்; அவர் தலைவர்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
மகாகவி பாரதியாரை மாணவர்கள் மத்தியில் புலவராய் காட்டுவதை நிறுத்துங்கள்.
அவர் சமுதாயத்திற்கு வழிக்காட்டிய தலைவர் என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
எட்டயபுரத்து எஜமான்
பட்டயம் தீட்டிய தலைவன் மகாகவி பாரதியின், 142ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவிற்குத் தலைமைதாங்கி சிறப்புரையாற்றியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
மலேசிய பாரதி தமிழ் மன்றமும் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து இந்த விழாவை நடத்தியது.
சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை.
அவ்வகையில் தமிழைப் பாமரனுக்கும் கொண்டு சேர்த்த ஒரு மாபெரும் தலைவர் மகாகவி பாரதி.
பட்டாளம் வந்தாலும் பணியாத கொள்கைத் தூண்
சுட்டாலும் கருக்காத
சுழற் கடலின் வெண்சங்கு
தந்தையர் நாடென்று தாய் நாட்டைப் பாடியவன்
செந்தீயின் சுடரினிலே
தெய்வத்தைத் தேடியவன்.
பாரதியைப் புலவர் என்று பார்க்காமல் பார் போற்றும் தலைவராகப் பார்க்க வேண்டும்.
காரணம் ஒரு தலைவனுக்கு உரிய அத்தனை கொள்கைகளும், செருக்கும் அவரது வரிகளில் நிரம்பி உள்ளன என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 9:36 pm
நாட்டின் பிரபல பாடகரும் நடிகருமான சிவக்குமார் தனது தாயாருடன் இறந்து கிடந்தார்: போலிஸ்
April 25, 2025, 4:59 pm
டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தொடர்ந்து எம்ஏசிசியிடம் வாக்குமூலம் அளித்து வருகிறார்
April 25, 2025, 4:59 pm
ஐக்கிய அரபு சிற்றரசுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமை: கோபிந்த் சிங்
April 25, 2025, 4:57 pm
பேராக்கில் மின்னியல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கபட்டலாம்: சிவநேசன்
April 25, 2025, 4:20 pm