செய்திகள் மலேசியா
நாட்டின் பிரபல பாடகரும் நடிகருமான சிவக்குமார் தனது தாயாருடன் இறந்து கிடந்தார்: போலிஸ்
செராஸ்:
நாட்டின் பிரபல பாடகரும் நடிகருமான சிவகுமார் ஜெயபாலன் இனறு செராஸின் தாமான் டேசா பெட்டாலிங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாயாருடன் இறந்து கிடந்தார்.
செராஸ் மாவட்ட போலிஸ் தலைவர் ஐடில் போல்ஹாசன் இதனை தெரிவித்தார்.
48, 76 வயதுடைய இரண்டு பாதிக்கப்பட்டவர்களும் கட்டிடத்தின் 11ஆவது மாடியில் இருந்து விழுந்ததாக நம்பப்படுவதாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று மதியம் 12.35 மணியளவில் நடந்தது. இதுவரை, எந்த குற்றவியல் கூறுகளும் அடையாளம் காணப்படவில்லை.
ஆனால் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இன்னும் நடத்தப்பட்டு வருகின்றன அவர் கூறினார்.
மரணமடைந்தவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக ஐடில் கூறினார்.
சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள போலிஸ் நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 1:11 pm
சிலாங்கூரில் உள்ள 688 ஆலய விவகாரத்தில் தெளிவான விளக்கம் தேவை; மக்களை குழப்பக்கூடாது: குணராஜ்
April 27, 2026, 1:10 pm
16ஆவது பொதுத் தேர்தலில் மூவார் தொகுதியைக் கைப்பற்ற பாஸ் கட்சி விரும்புகிறது
April 27, 2026, 1:09 pm
வீட்டுக் காவல் மேல்முறையீட்டை நஜிப் திரும்பப் பெற்றார்
April 27, 2026, 11:56 am
நெகிரி செம்பிலான் மந்திரி புசாருக்கான ஆதரவை அம்னோ திரும்பப் பெற்றது
April 27, 2026, 11:34 am
எரிபொருள் மானியச் சுமை: ஒரு வினாடிக்கு 2,300 ரிங்கிட் செலவிடும் மலேசிய அரசு
April 27, 2026, 11:16 am
15,000 பேர் திரண்ட மீன்பிடித் திருவிழா: 10 லட்சம் ரிங்கிட் பரிசை அள்ளிய திரெங்கானு நபர்
April 27, 2026, 11:02 am
