நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூரின் வளர்ச்சி  என்பது  மலாய்க்காரர்களின் நிலத்தை அபகரிக்கும் சீனர்களின் திட்டம் அல்ல: பிரதமர்

கோலாலம்பூர்:

கோலாலம்பூரின் வளர்ச்சி என்பது மலாய்க்காரர்களின் நிலத்தை அபகரிக்கும் சீனர்களின் திட்டம் அல்ல.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

தலைநகரில் உள்ள பழைய குடியிருப்புப் பகுதிகளை மறுவடிவமைப்பது மலாய்க்காரர்களை வெளியேற்றுவதற்கான ஒரு திட்டம் அல்ல.

மாறாக மக்களுக்கு மிகவும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான ஒரு படியாகும்.

மலாய் நிலத்தை கைப்பற்றும் முயற்சி என்ற கூற்று ஆதாரமற்றது. அதே வேளையில்  நிலத்தின் நிலையும்  மாறவில்லை.

இந்த மாதிரியான அரசியல் எனக்குப் புரியவில்லை. அந்த நிலம் மலாய் ரிசர்வ் நிலமா? நிரந்தரமானது. அந்த நிலம் மலாய் விவசாயக் குடியிருப்பு நிலமாக தான் நிரந்தரமாக உள்ளது.

ஆனால் ஸ்ரீ பெர்லிஸ் போன்ற பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் பழமையானவை. நெரிசலானவை. எந்த வசதிகளும் இல்லை. இதை நாங்கள் சரிசெய்ய விரும்புகிறோம்.

ஆனால் இது ஏன் அரசியல் பொருளாக மாறுகிறது என்று எனக்கு தெரியவில்லை.

நாங்கள் மலாய் நிலத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. ஒரு அறை வீடுகளை மூன்று அறை வீடுகளாக மாற்ற விரும்புகிறோம்.

அதுவும் நில அபகரிப்பு என்று அழைக்கப்படும் ஒரு சீனர்களின் திட்டமாக மாறியுள்ளது. இது இனம் சார்ந்த விஷயம் அல்ல. இது மக்களின் கண்ணியம் சார்ந்த விஷயம். 

 கோலாலம்பூர் நகர மண்டபத்தில்   நடைபெற்ற கோலாலம்பூர் படைப்பு வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போது பிரதமர்  இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset