
செய்திகள் மலேசியா
சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலைய மேம்பாடு; பிராந்திய மையமாக பேராக்கின் நிலையை வலுப்படுத்தும்: பிரதமர்
ஈப்போ:
சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தை மேம்படுத்துவது வர்த்தகம், தொழில், சுற்றுலாவுக்கான முக்கிய பிராந்திய மையமாக பேராக்கின் நிலையை வலுப்படுத்தும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த நம்பிக்கை தெரிவித்தார்.
அரசாங்க நிதியில் அதிக சுமையை ஏற்படுத்தாத மூலோபாய முதலீடுகள் மூலம் விமான நிலையத்தின் திறனை முன்கூட்டியே மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டை (எம்ஏஎச்பி) நான் பாராட்டுகிறேன்.
இன்று, திறனை மேம்படுத்துவதற்கும் விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கும் எம்ஏஎச்பி மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கையை நாம் காண்கிறோம்வ்
இது ஈப்போவில் வர்த்தகம், தொழில் மற்றும் சுற்றுலா போன்ற பகுதிகளுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி பயனளிக்கும். இதற்காக, எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னர், கோலாலம்பூரிலிருந்து ஈப்போவிற்கு விமானங்கள் குறைவாக இருந்ததால், விமான நிலையத்தை விரிவுபடுத்துவது சவால்களை ஏற்படுத்தியது.
மக்கள் பெரும்பாலும் வழக்கமான வாகனங்களைப் பயன்படுத்த விரும்பினர்.
இருப்பினும், சிங்கப்பூர், செனாய் கூச்சிங் போன்ற பிற இடங்களிலிருந்து விமானங்கள் வருவதால் இந்த விமான நிலையத்தின் பயன்பாடு இப்போது விரிவடைந்துள்ளது.
இது விமான நிலையத்திற்கு அதன் தனித்துவமான கவர்ச்சியை அளிக்கும்.
இன்று இங்குள்ள சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தை மேம்படுத்தும் நிகழ்வில் பிரதமர் தனது உரையில் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 16, 2025, 8:16 pm
பிரிக்பீல்ட்ஸ் வணிகர்கள் பொதுமக்களை பிரதமர் சந்தித்தார்: தீபாவளி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்
October 16, 2025, 6:33 pm
என் மகளுக்கு 50 அல்ல, 200 கத்தி குத்து காயங்கள் உள்ளன: பாதிக்கப்பட்டவரின் தாய்
October 16, 2025, 12:28 pm
சபா மாநில தேர்தல் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும்: தேர்தல் ஆணையம்
October 16, 2025, 9:53 am
பள்ளிகளில் ஆபத்தான பொருட்களுக்கு தடை விதிப்பதுடன் மாணவர்களின் நடத்தையைக் கண்காணிக்க வேண்டும்: சரஸ்வதி
October 16, 2025, 9:51 am