நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கட்சி சொத்துக்களின் அறங்காவலர் பொறுப்பை மறுத்ததாக குற்றச்சாட்டு; ஜாஹிட் மன்னிப்பு கேட்க வேண்டும்: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

கட்சியின் சொத்துக்களின் அறங்காவலராக இருந்து தன்னை விடுவிப்பதற்கான கடிதத்தில் கையெழுத்திட தாம்  மறுத்ததாக  அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஜாஹிட் ஹமிடி குற்றம் சாட்டியுள்ளார்.

இக்குற்றச்சாட்டுக்கு ஜாஹித் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் மகாதிர் முகமத்  கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று ஏப்ரல் 25 முதல் ஏழு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் ரஃபீக் ரஷீத் சமர்ப்பித்த கோரிக்கை கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார்.

அம்னோ தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜாஹிட் மன்னிப்பு கேட்டு தனது குற்றச்சாட்டுகளை மறுக்க வேண்டும்.

எதிர்காலத்தில் அது நிபந்தனையற்றதாகவும் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

செய்தித்தாள்களிலும், டத்தோஶ்ரீ ஜாஹிட்டின் அனைத்து அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்களிலும் பகிரங்கமாகவும் எழுத்துப்பூர்வமாகவும் மன்னிப்பு கோர வேண்டும்.

இந்த விஷயத்தில் பொருத்தமானதாகவும் அவசியமானதாகவும் கருதப்பட்டால், மற்ற தரப்பினருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset