செய்திகள் மலேசியா
ஐக்கிய அரபு சிற்றரசுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமை: கோபிந்த் சிங்
துபாய்:
ஐக்கிய அரபு சிற்றரசுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமை என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் கூறினார்.
மலேசியா, ஐக்கிய அரபு சிற்றரசு, ருவாண்டா ஆகிய நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகளில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன.
நான்காம் தொழிற்புரட்சிக்கான மையத்தின் உலகளாவிய கூட்டமைவின் கீழ், இந்த மூன்று நாடுகளும் செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளையும், செயற்கை நுண்ணறிவு நிர்வாக நடைமுறைகளைச் செயல்படுத்தும் முறைமைகளையும் சுற்றுவட்டார நாடுகளை ஊக்குவிப்பதற்கும், திறன்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், தொழில்நுட்பத்தின் முழுப் பயனையும் அடைய உதவுவதற்கும் இணைந்து செயல்படும்.
இதன்வழி செயற்கை நுண்ணறிவு இலக்கவியல் தொழில் நுட்பத்தில் மக்கள் பயனடைவதோடு, பொருளாதாரத்தில் வலுப்பெறவும் உதவும்.
இந்த முயற்சி, Dubai Future Foundation (C4IR-UAE-இன் சட்டப்பூர்வ அமைப்பு), C4IR Rwanda, MyDigital Corporation எனப்படும் மலேசிய இலக்கவியல் கூட்டுறவு கழகம் இடையே நேற்று நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்றத்தின் வழி உறுதியானது.
தற்போது நடைபெற்று வரும் துபாய் செயற்கை நுண்ணறிவு வாரத்தையொட்டி இந்தப் புதிய ஒத்துழைப்பு துவக்கம் கண்டது.
உலகளாவிய நிலையில், மலேசிய ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமையளிக்கிறது.
இதன்வழி செயற்கை நுண்ணறிவு துறையில் உலகளாவிய நிபுணத்துவத்தை ஒன்றிணத்து, வலுப்படுத்துவதோடு, நிலையான எதிர்காலத்தை நோக்கி இலக்கவியல் மாற்றங்களை துரிதப்படுத்த முடியும் என தாம் நம்புவதாக அமைச்சர் கோபிந் சிங் டியோ தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 5:28 pm
மொஹைதின் மருமகனை நாட்டிற்கு கொண்டு வருவது கடினம்: எம்ஏசிசி
October 29, 2025, 5:27 pm
அரசு ஊழியர்களை அவமதிக்க வேண்டாம்: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
October 29, 2025, 5:26 pm
இந்திய சமுதாயத்தின் உரிமைகளை ஒரு நாளும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: டத்தோஸ்ரீ ரமணன்
October 29, 2025, 5:24 pm
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம்: சரஸ்வதி கந்தசாமி
October 29, 2025, 4:42 pm
பேராக்கில் வரலாற்றுப்பூர்வ திருமுருகர் மாநாடு
October 29, 2025, 4:17 pm
சம்மன்களுக்கு 50% தள்ளுபடியா? சட்டத்தை கேலிக்கூத்தக்க வேண்டாம்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கண்டனம்
October 29, 2025, 12:23 pm
சிறுவனின் கழுத்தில் வெட்டப்பட்ட சம்பவம்: பெற்றோருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்
October 29, 2025, 12:22 pm
சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கான மானியம் நிலை நிறுத்தப்பட வேண்டும்: டாக்டர் சுரேந்திரன்
October 29, 2025, 12:20 pm
