
செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா; மே 1ஆம் தேதி நடைபெறுகிறது: திருநாவுக்கரசு
சிரம்பான்:
இளையத் தமிழவேள் ஆதி. குமணன் நினைவு விழா வரும் மே 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இவ்விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மு. திருநாவுக்கரசு இதனை கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை ஏற்பாடு செய்யப்படுகிறது.
அவ்வகையில் இவ்வாண்டுக்கான விழா வரும் மே 1ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தாமரை குழுமத்தின் தலைமை இயக்குநர் டத்தோ ரெனா ராமலிங்கம் இவ்விழாவிற்கு தலைமையேற்று உரையாற்றவுள்ளார்.
ராகா உதயா சிறப்புரையாற்ற உள்ளார். எம்கே கருணாகரன் வரவேற்புரையும் பாலமுருகன் நன்றியுரையும் ஆற்றவுள்ளனர்.
பொன் கோகிலம் இவ்விழாவை தொகுத்து வழங்கவுள்ளார்.
ஆகவே தமிழ் ஆர்வலர்கள் திரளாக வந்து இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என திருநாவுக்கரசு கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 12:35 am
மஇகாவுக்கு இனி அமைச்சர் பதவி தேவையில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
July 6, 2025, 3:45 pm
பிரிக்ஸ் மலேசியாவுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை வழங்குகிறது: பிரதமர் அன்வார்
July 6, 2025, 3:24 pm
சபா சட்டமன்றம் நவம்பர் 11-ஆம் தேதி கலையும்: சபாநாயகர்
July 6, 2025, 12:21 pm
பாலியில் ஃபெரி மூழ்கியது: மலேசியர் பாதிக்கப்பட்டிருக்கலாம்
July 6, 2025, 11:25 am