
செய்திகள் மலேசியா
பேராக்கில் மின்னியல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கபட்டலாம்: சிவநேசன்
ஈப்போ:
மின்னியல் சிகரெட்டில் போதைப் பொருள் ரசாயணங்கள் கலக்கப்படுவதா போலிஸ் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளதால் அதனை பேராவிலும் தடை செய்யப்படலாம்.
மாநில சுகாதார, மனிதவளம், தேசிய ஒருங்கிணைப்பு, இந்திய சமூக விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் இதனை கோடிகாட்டியுள்ளார்.
திரெங்காணு மாநிலம் மின்னியல் சிகரெட் விற்க தடைவிதித்துள்ளது. அதே போன்று பேராவிலும் அது அமலாக்கத்திற்கு கொண்டு வரலாம்.
அது தொடர்பாக அறிக்கை ஒன்று தாக்கல் செய்ய மாநில சுகாதார இலாகா இயக்குனரிடம் பணித்துள்ளதாகவும்.
அந்த அறிக்கை மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதுன் இவ்வாண்டு அக்டோபர் மாதம் அதனை தடை செய்யப்படலாம்.
அதனை தடை செய்ய தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதனை வரவேற்பதாவும் , முறையே தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .
இன்று ஈப்போவில் உள்ள ராஜா பெர்மைசூரி பைனும் மருத்துவ மனை பார்வையாளர்கள் வாரிய குழுவினர்களுக்கு
நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டப் பின்னர இதனை சிவநேசன் தெரிவித்தார்.
இந்த நியமனத்தில் 20 நபர்கள் இடம் பெற்றுள்ளனர், அவர்களில் வழக்கறிஞர் மு. கமலநாதன், சி. பாலகிருஷ்ணன், எஸ். குமார் ராவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 9:36 pm
நாட்டின் பிரபல பாடகரும் நடிகருமான சிவக்குமார் தனது தாயாருடன் இறந்து கிடந்தார்: போலிஸ்
April 25, 2025, 4:59 pm
டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தொடர்ந்து எம்ஏசிசியிடம் வாக்குமூலம் அளித்து வருகிறார்
April 25, 2025, 4:59 pm
ஐக்கிய அரபு சிற்றரசுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமை: கோபிந்த் சிங்
April 25, 2025, 4:20 pm