நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தொடர்ந்து எம்ஏசிசியிடம் வாக்குமூலம் அளித்து வருகிறார்

புத்ராஜெயா:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அவருடன் தொடர்புடைய ஊழல், பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக வாக்குமூலம் அளிக்கும் செயல்முறையைத் தொடர்கிறார்.

இதற்காக அவர்  இன்று புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்  தலைமையகத்திற்கு வந்தார்.

ஒன்பதாவது பிரதமரை ஏற்றிச் சென்ற வாகனம் பிற்பகல் 2.52 மணிக்கு வந்தது. வாக்குமூலம் அளிக்கும் நோக்கத்திற்காக அவர் எம்ஏசிசி  தலைமையகத்திற்கு வந்தது.

அவர் ஒன்பதாவது முறையாக வாக்குமூலம் அளிக்கிறார்.

நேற்று, ஏழு மணி நேர வாக்குமூலப் பதிவு செயல்முறையை முடித்த பிறகு, மாலை 6.11 மணிக்கு அவர் எம்ஏசிசி தலைமையகத்திலிருந்து வெளியேறுவதைக் காண முடிந்தது.

ஆகஸ்ட் 2021 முதல் நவம்பர் 2022 வரை பிரதமராக இருந்த காலத்தில் மலேசிய குடும்பத் திட்டத்தின் விளம்பரம், விளம்பரத்திற்காக நிதி செலவழித்தல் மற்றும் கையகப்படுத்துதல் தொடர்பான ஊழல், பணமோசடி வழக்கு தொடர்பாக அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset