நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாரா மருத்துவ பயிற்சிக்கு 1 சதவீத இந்தியர்கள் மட்டுமே தேர்வு ஏமாற்றமளிக்கிறது: சிவராஜ்

கோலாலம்பூர்:

பாரா மருத்துவ  பயிற்சிக்கு 1 சதவீத இந்தியர்கள் மட்டுமே தேர்வானது சமுதாயத்திடையே பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என செனட்டர் சிவராஜ் கூறினார்.

இந்த ஆண்டு 72,208 இந்திய மாணவர்கள் இப் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்,

இதில் 1.1 சதவீதம் பேருக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் தரவுகள் கூறுகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை தொடர்பான சுகாதார அமைச்சின் இந்தத் தரவுகள் தனக்கு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

சம்பந்தப்பட்ட தரவு, நியாயமற்ற சூழ்நிலையை பிரதிபலிக்கிறது.

மேலும் தேர்வுக் குழு, தேர்வு அளவுகோல்களை நான் சந்தேகிக்கிறேன்.

எனது கேள்விகளுக்கு சுகாதார அமைச்சர் ஜூல்கிப்ளி அஹ்மத் பதில் அளிக்க வேண்டும்.

அதே வேளையில் இந்நிலை சரி செய்யப்பட வேண்டும் என்று சிவராஜ் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset