நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 எம்டிபி ஊழல் மீண்டும் நிகழாமல் இருக்க எம்ஏசிசி, போலிஸ் துறையில் சீர்திருத்தத்தை விரைவுபடுத்துங்கள்: கோபிந்த் சிங்

கோலாலம்பூர்:

1 எம்டிபி ஊழல் மீண்டும் நிகழாமல் இருக்க எம்ஏசிசி, போலிஸ் துறையில் சீர்திருத்தத்தை விரைவுபடுத்துங்கள்.

இயக்கவியல் அமைச்சரும் ஜசெக தலைவருமான கோபிந்த் சிங் இதனை கூறினார்.

1 எம்டிபி போன்ற ஊழல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆக போலிஸ் படையிலும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திலும்  சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் அதிகார துஷ்பிரயோகம்,  நாட்டின் முதலீட்டு நிறுவனத்தின் நிதியில் 2.3 பில்லியன் ரிங்கிட் பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 1 எம்டிபி வழக்கின் தீர்ப்பு குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மடானி அரசாங்கம் பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளது.

அதில் சட்டத் துறை தலைவர், அரசு வழக்கறிஞர் பதவிகளைப் பிரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஆனால் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும். அமலாக்க நிறுவனங்களில் சீர்திருத்தங்களைக் கோருவதும் இப்போது அவசரத் தேவையாக உள்ளது.

அவை உண்மையில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று கோபிந்த் சிங் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset