நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் மீண்டும் வெள்ளம்: சிகாமட்டில் 6 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளது

சிகாமட்:

கனமழையைத் தொடர்ந்து ஜொகூர் மாநிலத்தில் நேற்று மீண்டும் வெள்ளம் ஏற்பட்டது.

சிகாமட் மாவட்டம் உட்பட காலை நிலவரப்படி ஆறு தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன.

32 குடும்பங்களைச் சேர்ந்த 103 பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்கும் வகையில் இந்த மையங்கள் திறக்கப்பட்டன.

12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்கும் கம்போங் பத்து படாக் சமூக மையம், கம்போங் தாசெக் பல்நோக்கு மண்டபம், கம்போங் ஜாபி சமூக மையம் ஆகியவை திறக்கப்பட்ட நிவாரண மையங்கள் ஆகும்.

ஜொகூர் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் அஸ்மான் ஷா அப்துல் ரஹ்மான் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset