நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்லிஸ் மந்திரி புசாராக அபு பக்கர் பதவியேற்றார்

அராவ்:

கோல பெர்லிஸ் மாநில சட்டமன்ற உறுப்பினர் அபு பக்கர் ஹம்சா பெர்லிஸின் புதிய மந்திரி புசாராக இஸ்தானா அராவ்வில் இன்று பதவியேற்றார்.

முன்னதாக மாநில சுற்றுலா, கலாச்சார ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த அவர், பெர்லிஸின் ராஜாவான துவாங்கு சையத் சிராஜுதீன் புத்ரா ஜமலுல்லைல் அனுமதி வழங்கிய பின்னர், மாலை 4.08 மணிக்கு பெர்லிஸின் 9ஆவது மந்திரி புசாராக பதவியேற்றார்.

அதே நேரத்தில் பெர்லிஸ் தேசியக் கூட்டணி துணைத் தலைவரும், பெர்சத்து மாநிலத் தலைவருமான அபு பக்கர், பெர்சத்துவிலிருந்து பெர்லிஸுக்கு முதல் மந்திரி புசார் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset