நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளைக்கு 1 மில்லியன் ரிங்கிட் நன்கொடை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் குழுமம் வழங்கியது

கோலாலம்பூர்:

ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளைக்கு
மாலிக் ஸ்ட்ரீம்ஸ் குழுமத்திடமிருந்து 1 மில்லியன் ரிங்கிட் நன்கொடை கிடைத்துள்ளது.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் குழும நிறுவனங்களின் நிறுவனர் டத்தோ அப்துல் மாலிக் இந்நிதியை ஒப்படைத்தார்.

சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளை சமூகப் பணிகளில் பயன்படுத்துவதற்காக இந்த 1 மில்லியன் ரிங்கிட் நன்கொடையை தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டது.

மேலும் இந்திய சமூகத்திற்கு உதவி வழங்குவதில் கவனம் செலுத்தும் ஜொகூர் அரச குடும்பத்தின் கீழ் உள்ள ஒரு அறக்கட்டளையான யாயாசன் சுல்தானா ரோக்யாவிற்கும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் 100,000 ரிங்கிட் நன்கொடை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset