நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோ ஸ்ரீ டாக்டர் எம் சரவணன் அவர்களுக்கு வாழும் வழிகாட்டி என்ற உயரிய விருதை ஆசான்ஜி வழங்கி சிறப்பித்தார்

கோவை:

தமிழ் நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள பிரபல பிஎஸ்ஜி கல்லூரி அரங்கத்தில் 
ஆத்ம யோகா அறக்கட்டளை சார்பில்  “மாறுவோம் முன்னேறுவோம்” என்கிற தலைப்பில் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1800 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்ற இந்நிகழ்வில்,  ம இ கா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம் சரவணன் அவர்களுக்கு வாழும் வழிகாட்டி என்ற  உயரிய விருதை திரு ஆசான்ஜி வழங்கினார்.

டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்களின் மனித நேயச் சேவை ,  இலக்கியத்துக்கும், அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்கும் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு , மலேசிய நாட்டில் இரண்டு தவணை துணை அமைச்சராக, மனித வள அமைச்சராக ஆற்றிய சாதனைப் பணிகள், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர் மனித வள அமைச்சராக பொறுப்பேற்றிருந்த போது மொழி ,மதம், இனம் கடந்த அவரது மக்கள் நலப் பணி, கடல் கடந்த  அவரது  எண்ணற்ற சமூக சேவைகளைக் கருத்தில் கொண்டு  இந்த விருதுக்கு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம் சரவணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக ஆசான்ஜி கூறினார்.

மொத்தம் 12 ஆளுமைகளை இறுதி செய்து அதில் எல்லா நிலைகளிலும் தகுதி மிகப்பெற்ற  மாபெரும் தலைவராக மாண்புமிகு டத்தோ சரவணன் தெரிவு செய்யப்பட்டார் என்று ஆசான்ஜி  குறிப்பிட்டார்.

மேலும் தனது வாழ்த்துரையில், அதிகாரங்களைத் தன் தலைக்கு ஏற்றாமல் எளிய மக்களும் தன்னை அணுகக் கூடியவராக மலேசியாவில் இருக்கும் ஒரு மாபெரும் ஆளுமை மிக்க தலைவராகத் திகழ்கிறார் டத்தோ ஸ்ரீ சரவணன் என்று புகழாரம் சூட்டினார்.

இவரது வாழ்வும் வார்த்தைகளும் இன்றைய இளைய தலைமுறையின் முனேற்றத்திற்கு வழிகாட்டியாக  இருப்பதினால் “வாழும் வழிகாட்டி” என்ற  இந்த உயரிய விருதுக்கு மிகத் தகுதியானவர் மாண்புமிகு டத்தோ  ஸ்ரீ டாக்டர் எம் சரவணன் என்று திரு ஆசான்ஜி  தனது உரையில் தெரிவித்தார்.

விழா அரங்கில்  கூடியிருந்த அனைவரின் ஏகோபித்த பலத்த கரவொலியோடு விருது வழங்கும் நிகழ்வு இனிதே நடைபெற்றது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset