செய்திகள் மலேசியா
தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவராக புனிதன் நியமனம்
கோலாலம்பூர்:
தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவராக புனிதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பெரிக்கத்தான் தேசியக் கூட்டணியின் தற்போது தனது உயர்மட்ட பொறுப்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் மீண்டும் தேசியக் கூட்டணியின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ ஹாடி அவாங், கெராக்கான் கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ், டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின், மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் தலைவர் பி.புனிதன் ஆகியோர் துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தேசியக் கூட்டணியின் செயலாளராக பொறுபேற்றுள்ளார்.
மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.சுப்பிரமணியம், கே.மணிமாறன் ஆகியோர் உச்சமன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 11:17 pm
இந்தியாவிற்கு செல்லும் மலேசியர்கள் கட்டாயம் வருகை அட்டைகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
April 22, 2026, 9:24 pm
நாளை முதல் டீசலின் விலை 85 சென் குறைகிறது
April 22, 2026, 5:49 pm
மலாக்கா நீரிணையை கடக்கும் கப்பல்களுக்கு வரி விதிப்பது குறித்து இந்தோனேசியா பரிசீலித்து வருகிறது
April 22, 2026, 5:44 pm
தகவல்கள் இன்னும் முழுமையடையாததால் ஆர்எஸ்-1 அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை: அமிரூடின் ஷாரி
April 22, 2026, 5:43 pm
டான்ஶ்ரீ இசா சமத்தின் மறு ஆய்வு மனு: மே 13ஆம் தேதி விசாரிக்கப்படும்
April 22, 2026, 5:32 pm
