செய்திகள் மலேசியா
இணையப்பகடிவதைக்கு எதிரான சட்டத்திருத்ததில் ஈஷாவுக்கு மரியாதை: நாட்டில் அதிகரித்து வரும் இணைய பகடிவதையைத் துடைத்தொழிக்க வழிவகுக்கும்
கோலாலம்பூர்:
இணையப்பகடிவதைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த ஈஷா எனப்படும் ராஜேஷ்வரி அப்பாவுவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக குற்றவியல் சட்டத்திருத்தத்தில் 507D(2) உட்பிரிவுக்கு ஈஷா பிரிவு ( ESHA CLAUSE) என பெயர் வைக்கப்பட்டுள்ளது
இந்த தகவலை பிரதமர் துறைக்கான சட்டம், கழக சீர்த்திருத்த அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒஸ்மான் கூறினார்.
ஈஷா சட்டப்பிரிவு என்பது பெயர் சட்டத்தைக் குறிக்கும் பெயராக மட்டுமல்ல; இணையப்பகடிவதையால் மரணமடைந்த நபருக்கு நியாயம் கிடைக்க செய்யும் வழிவகையாகும் என்று அமைச்சர் விவரித்தார்
மலேசியாவில் எதிர்காலத்தில் இணையப்பகடிவதை சம்பவத்தால் யாரும் உயிரிழக்கக்கூடாது. இதன் காரணமாக அரசாங்கம் இணைய பகடிவதைக்கு எதிரான சட்டங்களைக் கடுமையாக்கியுள்ளதாக அவர் சொன்னார்.
முன்னதாக, இணையப்பகடிவதை தொடர்பாக மக்களவையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2025, 1:54 pm
அதிக சுமை விதிமுறைகளில் அதிருப்தி அடைந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை இல்லை: அந்தோனி லோக்
October 27, 2025, 1:45 pm
தனது முதல் மலேசியா பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் புறப்பட்டார் டிரம்ப்
October 27, 2025, 9:07 am
மொஹைதின் பதவி விலக வேண்டும்; அஸ்மின் நீக்கப்பட வேண்டும்: சைபுடின்
October 26, 2025, 9:20 pm
