நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு சிறந்த தலைமைத்துவம் வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு சிறந்த தலைமைத்துவம் உருவாக வேண்டும்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தினார்.

முக்மின் - மின்கோய்ன் ஏற்பாட்டில் சீராட் அனைத்துலக மாநாடு தலைநகரில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

17 நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 800 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக உலகளாவிய வர்த்தக ஜாம்பவான்கள் இந்த மாநாட்டில் ஒன்றுகூடி உள்ளனர்.

இதுவொரு மகத்தான முயற்சியாகும். 

இவ்வேளையில் இம் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களான டத்தோ வீரா ஷாகுல் தாவூத், டத்தோ பிவி அப்துல் ஹமித் ஆகியோருக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

அதே வேளையில் தமிழ் பேசும் மக்கள் உலகம் முழுவதும் விரிந்து கிடக்கிறது.

இதில் இந்திய முஸ்லிம் சமுதாயம் வர்த்தகத்தில் மிகப் பெரிய சாதனைகளை படைத்து வருகின்றனர்.

அச் சமூக மக்களுக்கும் எனது வாழ்த்துகள்.

மேலும் தலைவர் மாறுவர், தர்பார் மாறும், தத்துவம் மட்டுமே அட்சயப் பாத்திரம் என்பது கவிஞர் கண்ணதாசனின் காலக்கணிதம் கவிதை வரியாகும். 

ஆனால் இன்றைய சூழலில் அது கொஞ்சம் மாறி 'யுக்தி மட்டுமே நமது இலட்சியத்தை வெற்றிகளாக்கும்' என்பது நிதர்சனமாகி வருகிறது. 

தலைவர் வேறு தலைமைத்துவம் வேறு என்பதை நாம் உணர வேண்டும். 

புதிய தலைமுறை, புதிய தலைமைத்துவம் உருவாக்கும் முயற்சியாகவும் இந்த சீராட் மாநாடு அமைகிறது என்பதில் ஐயமில்லை.

ஒரு சமுதாயம் என்பது, ஒரே பெயர் அல்லது ஒரே அடையாளம் மட்டும் அல்ல. அது ஒரே பொறுப்பு, ஒரே பாதை, ஒரே எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பது. 

வேர்களை இணைத்து, எதிர்காலத்தைக் கட்டமைக்கும் இந்த முயற்சி வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset