நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமூகம் மலாய் மொழியைப் பயன்படுத்த வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கிள்ளான்:

இந்திய சமூகம் மலாய் மொழியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என மஇகா பரிந்துரைக்கிறது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் மலாய் மொழியின் பயன்பாட்டை  மக்கள் அதிகரிக்க வேண்டும்.

குறிப்பாக பல்லின மலேசியாவில் மலாய் மொழி முக்கிய தொடர்பு மொழியாகும்.

இந்தியர்கள் பல பாடகர்கள் மலாய் பாடல்களை மிகச் சிறப்பாகப் பாடுகிறார்கள் என்பதை வரலாறு காட்டுகிறது.

இந்திய சமூகத்தின் அடுத்த தலைமுறை மலாய் மொழியின் பயன்பாட்டை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

புக்கிட் கமுனிங்கில் நடைபெற்ற பொங்கல் விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

இதனிடையே அனைத்துப் பள்ளிகளிலும் மலேசியர்கள் மலாய் மொழிப் பாடத்தை கட்டாயமாக்கும் நடவடிக்கையை மஇகா வரவேற்கிறது.

மலாய் மொழி தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற மாமன்னரின் ஆணையுடன் இது ஒத்துப்போகிறது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset