நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற தேசிய முன்னணிக்கு பிரதமர் வாழ்த்து

கோலாலம்பூர்:

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற தேசிய முன்னணிக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த முடிவுகள் மக்கள் தங்கள் முயற்சிகள், சேவை, அடிமட்ட மட்டத்தில் அர்ப்பணிப்பு ஆகியவற்றில் தொடர்ந்து கொண்டிருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

மேலும் மக்களின் நம்பிக்கையாக பொறுப்புணர்வுடன் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

சபாவில் வளர்ச்சியை வலுப்படுத்தவும், மக்களின் நல்வாழ்வு தொடர்ந்து பராமரிக்கப்படவும், கூட்டு உறுதியுடன் அரசு திட்டங்களை செயல்படுத்தவும் மடானி அரசாங்கம் ஒருமித்த கருத்து, ஒற்றுமை உணர்வை தொடர்ந்து நிலைநிறுத்தும் என்று பிரதமர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset