நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கூட்டணி விண்ணப்பத்தை அங்கீகரித்த பிறகு எதிர்கால திசை குறித்து மஇகா விவாதிக்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கிள்ளான்:

மஇகாவின் விண்ணப்பத்தை தேசியக் கூட்டணி அங்கீகரித்த பிறகு எதிர்கால திசை குறித்து கட்சி விவாதிக்கும்.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

எதிர்க்கட்சி கூட்டணியில் சேர தேசியக் கூட்டணி விண்ணப்பத்தை அங்கீகரித்த பிறகு, மஇகா ஒரு மத்திய செயலவை கூட்டத்தை நடத்தும்.

விரைவில் மத்திய செயற்குழு கூட்டம் நடத்தப்படும். அதற்கு நானே தலைமை தாங்குவேன்.

ஆனால் தேதி எதுவும் இப்போது குறிப்பிட முடியாது.

தேசியக் கூட்டணியில் இணைவது குறித்து மத்திய செயற்குழுவுடன் நான் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிப்பேன்.

விரைவில் நாங்கள் கூடி தேதியை அறிவிப்போம் என்று புக்கிட் கமுனிங்கில் நடந்த ஒரு விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset