நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெளிவான சிந்தனையுள்ள சமுதாயத்தில் சிறந்த தலைவர்கள் தானாக உருவாகுவார்கள்: டத்தோஸ்ரீ சரவணன்

கூலிம்:

தெளிவான சிந்தனையுள்ள சமுதாயத்தில்  சிறந்த தலைவர்கள் தானாக உருவாகுவார்கள்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

தமிழ் இலக்கியத்தை நேசிக்கும், வாசிக்கும், சுவாசிக்கும் ஒரு ரசிகனாக 2026க்கான முதல் நூல் வெளீட்டு விழா கெடா மாநிலத்தில் இன்று நடைபெற்றது.

ஆசிரியர் இராமசாமியின் கரிக்குட்டி, கரிக்குட்டி 2.0, சிறார்களுக்கான படைப்புகளின் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை தாங்கி வெளியீடு செய்ததில் மகிழ்ச்சி.

இளமையில் கல்வி என்பது சிலை மேல் எழுதிய எழுத்து போல அழியாது, மறையாது.

சிறு வயது முதலே வாசிக்கும் பழக்கத்தை சிறுவர்களிடம் விதைக்க வேண்டும்.

அப்போதுதான் சிந்திக்கும், கேள்வி கேட்கும், தலைசிறந்த சமுதாயத்தை
நாம் உருவாக்க முடியும்.

தெளிவான சிந்தனையுள்ள சமுதாயத்தில் சிறந்த தலைவர்கள் தானாக உருவாகுவார்கள்.

எனவே வாசிப்போம் தமிழை நேசிப்போம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset